தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 (Bigg Boss 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் மீரா மிதுன் (Meera Mitun). மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் நடிகை மீரா மிதுன். சில படங்களில் சிறு காட்சிகளில் மீரா மிதுன் நடித்திருக்கிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார். இதனால் இணையத்தில் மீராமிதுன் எதிராக வலுவான கண்டனம் எழுந்தது.   பலமுறை ஏடாகூடமாக பேசி மாற்றிக் கொள்வார் மீரா மிதுன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மீரா மிதுன் போலீசில் ஆஜராகாத நிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


ALSO READ | Meera Mithun Case: மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


இந்நிலையில் தற்போது தான் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து இருபபதாகவும், இப்போது என்னை சிறையில் அடைப்பதால், என்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆகி விடுவார்கள் என்றும் எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். 


முன்னதாக கேரளாவுக்குச் வெகேஷனில் சென்றிருந்த மீரா மிதுன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டார். இதனிடையே மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சென்னை காவல் நிலையத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்படும் போது கூட, ஒரு பெண்ணுக்கு அராஜகம் நடக்கிறது.. எனக்கு ஒரு நாள் முழுவதும் உணவு கொடுக்கவில்லை என்று கூறிய வந்த வீடியோ வைரலானது.


ALSO READ | மன உளைச்சலால் வாய் தவறி பட்டியல் இன மக்களை தவறாக பேசிவிட்டேன் - மீரா மிதுன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR