முன்னணி நடிகருக்கு ஜோடியான மேகா ஆகாஷ்..!
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க உள்ளார்.
சலீம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிக்கும் அடுத்த திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. சலீம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக டாமன் மற்றும் தியூ பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பையும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடி யாராக இருக்கும் என்பது சஸ்பென்ஸாக இருந்து வந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மேகா ஆகாஷ், கதாநாயகியாக நடித்துள்ளார்.
ALSO READ | பார்வதி அம்மாளின் வறுமைநிலை அறிந்து உதவ முன்வந்த முதல்வருக்கு நன்றி: லாரன்ஸ்
மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் நடித்துள்ளார். கன்னட திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் தனஞ்ஜெயா மற்றும் ப்ருத்திவி ஆகியோர், மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகின்றனர். இவர்களைத் தவிர, சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இயக்குநர் ரமணா வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்துடன், படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆக்ஷன் காட்சிகள், ரசிகர்களை வெகுவாக கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கதாநாயகனின் வாழ்க்கையில் நடைபெறும் 10 அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களம் தான் ‘மழை பிடிக்காத மனிதன்’. படத்தின் டைட்டிலைப் போலவே கதைக்களமும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்துள்ள படக்குழு. அடுத்த ஆண்டு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. படத்துக்கான இசையை விஜய் ஆண்டனியே அமைக்கிறார். INFINITI FILM VENTURES நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
ALSO READ | அள்ளி வரும் வாய்ப்புகள்; பாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR