கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான திரைப்படம் மெர்க்குரி. சைலன்ட் திரலராக வெளியான இப்படத்திற்கு எவ்வாறு பின்னணி இசை அமைக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவினை தற்போது படக்கொழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 1 முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 48 நாட்களாக புதிய படங்கள் எதுவும் திரைக்கு வெளியாகவில்லை, மேலும் அனைத்து படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. 



ஒன்றரை மாத வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. அதன்படி முதலாவதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மெர்க்குரி படம் தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் நாள் வெளியானது. 


30 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் வெளியான சைலன்ட் திரைப்படமான இப்படம் பெருமளவில் பாராட்டப்பட்டது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை குறித்து பெருமளவில் பாராட்டப்பட்டது.


இந்நிலையில் இப்படத்திற்கு எவ்வாறு பின்னணி இசை அமைக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!