கேரளாவில் மெர்சலின் புதிய சாதனை!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியானது.
மெர்சல் படம் ரூ.200 கோடி வசூலை குவித்ததாக அப்படக்குழுவினருக்கு விஜய் பார்ட்டி வைத்தார். இந்நிலையில் அந்த வகையில் தற்போது கேரளாவில் இந்தப்படம் பெரிய சாதனையை செய்துள்ளது.
மெர்சல் படம் தற்போது வரை கேரளாவில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை எந்தவொரு தமிழ் படமும் கேரளாவில் இந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று கேரளா வட்டாரத்தில் பேச்சு.