அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். 


மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில், மெர்சல் படத்தின் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 21) வெளியாக உள்ளது. 


முன்னதாக நேற்று டீசர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கும் என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.