பிரபல கர்னாடக சங்கீத பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். அம்மா என்று அன்புடன் கர்னாடக சங்கீத வித்வான்களால் மட்டுமல்ல, இசை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது காலத்தில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும், இவரது புகழ் ஐக்கிய நாடுகள் சபை வரை பரவியதற்கு அவரது உழைப்புதான் காரணம் என்று அவரது கணவர் சதாசிவம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 


இளைய தலைமுறை இசைஞர்களுக்கு அவர் இசை தெய்வம்; ரசிகர்களுக்கோ அவர் மேடையில் தோன்றிய தெய்வத் திருவுரு என்று சொன்னால் மிகையில்லை. 


இசையரசி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீகக் குரலுக்கு உண்டு. திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தொடங்கி உலகின் அனைத்து கோவில்களும் இசையரசியின் சுப்ரபாத இசையோடுதான் தொடங்குகின்றன. மாலையில் மனம் மயக்கும் விஷ்ணுசகஸ்ரநாமம், உலகியல் வாழ்வின் உண்மையை உணர்த்தும் பஜகோவிந்தம், வெறுமையாய் மனம் உணரும்போதெல்லாம் 'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்று அனைவரையும் பாடவைத்த கானக்குயிலுக்கு இன்று பிறந்தநாள்.


1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், குஜராத்தி, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், கன்னடம் போன்று பல மொழிகளில் தன் இசையால் எல்லோரையும் தன்வயமாக்கினார். செப்., 16, 1916 அன்று மதுரையில் பிறந்தார். விடாத முயற்சியும் கடினமான பயிற்சியும் அவரைச் சிறுவயதிலேயே இசைத்துறையில் தடம்பதிக்கச் செய்தது. 


இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.


எம். எஸ். சுப்புலட்சுமியின் படங்கள்:-


(1938) சேவாசதனம், தமிழ்


(1940) சகுந்தலை, தமிழ்


(1941) சாவித்திரி, தமிழ்


(1945) மீரா, தமிழ்


(1947) மீராபாய், ஹிந்தி


பெற்ற விருதுகள்:-


பத்ம பூசண், 1954


சங்கீத நாடக அகாதமி விருது, 1956 


சங்கீத கலாநிதி, 1968


இசைப்பேரறிஞர் விருது, 1970


மக்சேசே பரிசு, 1974


பத்ம விபூசண், 1975


சங்கீத கலாசிகாமணி விருது, 1975 


காளிதாஸ் சம்மன் விருது, (1988 -1989)


நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1990


பாரத ரத்னா - 1998