‘விவேகம்’  படத்தின் கேரள விநியோக உரிமையை பெரும் தொகைக்கு கைப்பற்றிய மூலக்குப்படம் பிலிம்ஸ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ‘விவேகம்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘விவேகம்’  படத்தின் டீஸர் மற்றும் ‘சர்வைவா’ பாடல் இணையத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியதோடு, மிகுந்த வரவேற்பை பெற்றது.


‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.


இந்நிலையில், இப்படத்தின் கேரள உரிமையைப் பெரும் விலைகொடுத்து வாங்கியுள்ளது மூலக்குப்படம் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தான் சமீபத்தில் பெரும் வசூல் சாதனை புரிந்த 'புலிமுருகன்' படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல, ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற தமிழகத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. 


சிவா இயக்கத்தில் அஜித் நயகனகாவும் நடித்து வரும் இந்தப்படத்தில், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிகின்றன.