மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கிடைக்கப்போகும் மகுடம்..!
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என மைசூர் பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பிரபல நடிகராக இருந்த புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் காலமானார். 46 வயதில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தென்னிந்திய திரையுலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிட்னஸில் மிகுந்த ஆர்வமுடைய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை திரையுலகத்தினராலும், ரசிகர்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மேலும் படிக்க | ஹெவி கிராஃபிக்ஸில் உருவாகும் ‘க்ரிஷ்-4’: வேற லெவல் அப்டேட்!
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டபோதும், புனீத் ராஜ்குமார் மறைவை எய்தினார். ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் சோகத்திற்குள்ளாக்கிய அவரின் உடல், கர்நாடக அரசின், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த கண்ணீர் மல்க புனீத் ராஜ்குமாருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
திரையுலகைக் கடந்து மனிதநேயமிக்கவராகவும் புனீத் ராஜ்குமார் இருந்தார். ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்த அவர், எண்ணற்றோருக்கு மருத்துவ உதவிகளையும் செய்தார். இதனால், நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்து ‘அப்பு’ ‘பவர் ஸ்டார்’ என அன்போடு அழைக்கப்பட்டார். திரைத்துறைக்கும், சமூகத்துக்கும் அவர் ஆற்றிய நற்பணிகளை போற்றும் விதமாகவும், சமூக பணிகளை அங்கீகரிக்கும் விதமாகவும், புனீத் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட மைசூர் பல்கலைக்கழகம், மறைந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் மைசூர் பல்கலைக்கழகத்தின் 102வது பட்டமளிப்பு விழாவில் இந்த கவுரவம் புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு முதன்முதலாக அப்பு என்ற படம் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் புனீத் ராஜ்குமார். மொத்தம் 29 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க | நெற்றியில் குங்குமத்துடன் நயன்தாரா! திருமணம் முடிந்ததா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR