கைதாகும் நடிகை நமிதாவின் கணவர்! என்ன செய்தார் தெரியுமா?
Namita Husband Arrest: பிரபல நடிகை நமிதாவின் கணவர், வீரேந்திர செளத்ரியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகம் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர், நமிதா. இவர், பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். இவர், கடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திர செளத்ரி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
கைதாகும் நமிதாவின் கணவர்..
நமிதாவின் கணவர் வீரேந்திரா செளத்திரி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) கவுன்சில் அமைப்பின் தமிழ்நாட்டிற்கான தலைவராக இருக்கிறார். இந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தன்னிடம் ரூ.41 வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக சேலத்த சேர்ந்த கோபால்சாமி என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரையும் இவ்வழக்கில் தொடர்புடைய பிறரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், பண மோசடி புகார் குறித்த விசாரனைக்கு ஆஜராகும் படி நமிதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி மற்றும் அவருடன் பணிபுரியும் இன்னொருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இவர்களை கைது செய்யக்கூறி போலீஸாருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்ஜே சூர்யா! ஹீரோ யார் தெரியுமா?
வழக்கு பின்னணி:
MSME கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலாளர் மீது புகார் கொடுத்துள்ள கோபால்சாமி, தன்னை அந்த நிறுவனத்தில் பணியமர்த்துவதாக கூறி அவர்கள் தன்னிடம் 50 லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகாரின் பேரில் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கடந்த மாதம் 31ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இது குறித்து சேலம் போலீஸார் தெரிவித்துள்ள தகவலின் படி, ஒன்றிய அரசாங்கத்தின் லோகோ, சின்னம் மற்றும் தேசிய கொடி ஆகியவற்றை இவர்கள் தவறான முறையில் உபயோகித்ததாக கூறப்படுகிறது. MSME குழுமத்தின் தலைவர் முத்துராமன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது பதவியில் நமிதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி சமீபத்தில் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு வருமாறு இவருக்கும், பாஜக மாநில ஊடக பிரிவின் துணைத்தலைவர் மஞ்சுநாத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் இருவருமே விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கைது செய்யப்பட உள்ளனர். தற்போது இந்த வழக்கு விசாரணை சேலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணவருக்கு துணையாக நமிதா..
நடிகை நமிதா, திருமணத்திற்கு முன்பு வரை படங்களில் கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இவருக்கு 2020ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகிய இவர், தற்போது அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பிசியாக இருக்கிறார். பெண்களின் முன்னேற்த்திற்கான சுய தொழிலை தொடங்கி வைப்பது, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்காக உதவுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பாஜக கட்சியில் இருக்கும் இவர், கட்சி தொடர்பான கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவர், தன் கணவர் கைதாகப்போகும் விவகாரம் குறித்து இன்னும் வாய்திறக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 800 திரைப்படத்தின் OTT வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ