‘நரகாசூரன்’ திரைப்படத்தின் சாங் மேக்கிங் வீடியோ!!
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் நரகாசூரன் படத்தின் சாங் மேக்கிங், வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ரான் யோஹான் அமைத்துள்ளார்.
இந்த படத்தை ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படம் இந்த மாதம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் சாங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.