8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள நஸ்ரியா!
திருமணம் எனும் நிக்கா படத்திற்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து நடிகை நஸ்ரியா தற்போது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
நடிகை நஸ்ரியா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பின்னர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அவரது குறும்பு தனமான நடிப்புகளாலும், கியூட் ரியாக்ஷ்னாலும் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தார்.
தமிழில், ராஜா ராணி, நையாண்டி, நேரம், வாயை மூடிபேசவும் என குறைந்த படங்களையே அவர் நடித்திருக்கும் போதும் என்னென்றும் நஸ்ரியா ரசிகர்கள் என ஒரு பட்டாளத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினார்.
மேலும் படிக்க | தொடங்கிவிட்டது கேஜிஎஃப் 3 - தயாரிப்பாளர் அறிவிப்பு
அவர் தன் காதலனான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். தன் திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை அவர் சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார்.
அவ்வப்போது சில மலையாளப் படங்களில் வந்து முகம் காட்டிவிட்டுச் சென்றார். அதிலும் டிரான்ஸ் என்ற மலையாளப் படத்தில் தன் கணவருடனே நடித்திருப்பார்.
இருந்தாலும் நஸ்ரியாவின் தமிழ் சினிமா கரியர் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு மறந்த நிலையில் தற்போது ஒரு காமெடி லவ்ஸ்டோரியில் நடித்து கம் பேக் கொடுத்துள்ளார்.
தமிழில் நான்-ஈ படத்தின் மூலம் அறிமுகமாகி, வெப்பம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நானி, நஸ்ரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவரது சமீப கால படங்களான ஜெர்ஸி, நின்னு கோரி, தேவ தாசு, கேங் லீடர், மிடில் கிளாஸ் அப்பாயி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் அவருக்கு பெண் ரசிகைகளை குவித்துள்ளது.
நஸ்ரியா நாசிம்மின் இந்த கம்பேக் படத்தின் பெயர் - அடடா சுந்தரா!. வரும் 20 ஆம் தேதி காலை 11.07 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இப்படம் ஜூன் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR