சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பார்ட்! 99 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம்!
National Cinema Day: தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு BookMyShow, PayTM மேலும் இந்தியா முழுவதும் 99 ரூபாய்க்கு திரைப்பட டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.
தேசிய சினிமா தினம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (எம்ஏஐ) மற்றும் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகள் ரூ.99க்கு விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்துள்ளது. மேலும், இந்த ஆபர்கள் கூடுதலாக ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து செல்லும். ஆப்பரில் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் மற்றும் ஆஃப்லைனிலும் வாங்கலாம். ஆர்வமுள்ள ரசிகர்கள் BookMyShow, Paytm போன்ற தளங்களில் அல்லது மல்டிபிளக்ஸ்களின் சம்பந்தப்பட்ட இணையதளங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகள் மற்றும் சலுகைகள் மீதான கூடுதல் விவரங்கள் அறிய சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மற்றும் அவர்களின் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | October 2023: இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள மலையாள திரைப்படங்கள்!
ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?
டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படங்களை அக்டோபர் 13, வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில சர்வதேச திரைப்படங்கள் இன்னும் வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும், ஜவான், மிஷன் ராணிகஞ்ச் மற்றும் Thank You for Coming போன்ற பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் இன்னும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும் சில திரைப்படங்கள் மல்டிபிளக்ஸ்களின் டிக்கெட் வரிகள் மற்றும் கட்டணங்களைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம்.
கடந்த ஆண்டு தேசிய சினிமா தினத்தன்று 6.5 மில்லியன் பேர் ஒரே நாளில் அதிக பட்சமாக படம் பார்த்தனர். இந்த ஆண்டு 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இந்த நாளை கொண்டாட உள்ளன. PVR INOX, CINEPOLIS, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K, DELITE போன்ற புகழ்பெற்ற திரையரங்குகள் மற்றும் பலர் இந்த விற்பனையில் பங்கேற்கின்றனர். மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஒரு அறிவிப்பில் புதிய சலுகைக்கான காரணத்தை விளக்குகிறது. அந்த அறிவிப்பில், "இந்த சிறப்பு சந்தர்ப்பம் அனைத்து வயதினரையும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியின் ஒரு நாளைக் கொண்டாடுகிறது, இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் பல திரைப்படங்களின் நம்பமுடியாத வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு பங்களித்த அனைத்து திரைப்பட ரசிகர்களுக்கும் இது இதயப்பூர்வமான நன்றி. நீங்கள் ரசித்து பார்த்த படங்களை மீண்டும் ஒருமுறை பாருங்கள்" என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - திவ்ய பாரதி! அதுவும் இந்த படத்திலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ