நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஃபா்ஸ்ட் லுக்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பாத்திங்களா?.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் கேமிராவும், நிர்மல் எடிட்டிங் பணியும் செய்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து, இப்படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் மார்ச் 8-ம் தேதி வெளிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.