சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள "ஐரா" திரைப்படம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘இமைக்கா நொடிகள்' படத்துக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கைவசம் அஜித்தின் ‘விஸ்வாசம்', சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்', நிவின் பாலியின் லவ் ஆக்ஷன் டிராமா, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி', மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா', அறிவழகன் படம், சர்ஜுனின் ஐரா, சிவகார்த்திகேயன் படம், விஜய் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.


இதில் ‘ஐரா' நயன்தாராவின் கேரியரில் 63-வது படமாகும். ஹாரர் ஜானரில் உருவாகும் இதனை ‘KJR ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி. ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். நயன்தாரா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘8 தோட்டாக்கள்' புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மேலும் இந்த படத்துக்கு செனிசாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 


இந்நிலையில் தற்போது "ஐரா" படம் மார்ச் 28ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.