NKP படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? கெத்து காட்டும் தல ரசிகர்கள்..!!
நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.
2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் அஜித் குமார் நடித்துள்ளார். இந்த படம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) திரைக்கு வந்தது. தயாரிப்பாளர் போனி கபூரின் லட்சிய தமிழ் படமான "நேர்கொண்ட பார்வை" ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கியுள்ளார். அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று, இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்த படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.58 கோடி ரூபாயை வசூல் செய்திருபாத கூறப்பட்டது.
இந்தநிலையில், படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தந்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது. வெளிநாட்டு வசூலில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை "நேர்கொண்ட பார்வை" இதுவரை வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.