விஜய் நடிப்பில் நெல்சன் உருவாக்கியிருக்கும் படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படமானது இன்று காலை உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சொதப்பிவிட்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்.



இந்நிலையில் இயக்குநர் நெல்சனை கலாய்த்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி, மூன்று மாதங்களில் கதை எழுதி 5 மாதங்களில் கமர்ஷியல் படம் செய்து சம்பாதிக்க வேண்டுமென நினைத்தால் இப்படித்தான் இருக்கும்.


மேலும் படிக்க | Beast Twitter Reactions: பீஸ்ட் ட்விட்டர் விமர்சனங்கள், என்ன இப்படி ஆகிடுச்சே


தியாகராஜா குமாரராஜா, பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்கள் கதை எழுதுவதற்கே நிறைய நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அதனால்தான் அவர்களது படம் சிறப்பானதாக இருக்கிறது. 



விஜய், அஜித் போன்றவர்களுக்கு தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான எந்தப் பார்வையும் இல்லை. அவர்கள் ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களுடன் இணைந்து படங்கள் செய்யவேண்டும்” என பதிவிட்டுள்ளனர்.


முன்னதாக இயக்குநர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், மூன்று மாதங்களுக்கு மேல் நான் எந்தக் கதையையும் எழுதுவதில்லை என கூறியிருந்தார். 


மேலும் படிக்க | இப்படி பண்ணிடீங்களே நெல்சன்! பீஸ்ட் திரைவிமர்சனம்!


அப்போது அந்தப் பேச்சு ஜாலியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் பீஸ்ட் படத்தை பார்த்தவர்களில் ஒரு தரப்பினர், மூனு மாசத்துல எழுதுன ஸ்கிரிப்ட் இதுதானா என அந்தப் பேச்சை வைத்து தற்போது நெல்சனை விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர். மேலும், ஒரு கதை எழுதுவதில் இவ்வளவு அலட்சியமாகவா ஒரு இயக்குநர் இருப்பார் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR