'தல' அஜீத் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் `விவேகம்'. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் `விவேகம்'. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. 


இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 


படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தற்போது விவேகம் படத்தின் டீசர் புதிய சாதனை படைத்திருக்கிறது. 


உலக அளவில் யுடியூப்பில் ‘விவேகம்’ படத்தின் டீசர் ஒரு கோடியே 9 லட்சம் பார்வையாளர்களும், 5 லட்சத்து 27 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. 


இதன் மூலம் குறுகிய காலத்தில் உலக அளவில் அதிக சாதனை படைத்து முதல் இடம் பிடித்த டீசர் இது என்ற பெருமையை ‘விவேகம்’ படைத்திருக்கிறது. 


முதல் இடத்தில் 'ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடி' படத்திற்கு 5 லட்சத்து 66 ஆயிரம் லைக்குகள் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.