‘குஷி’ மோடில் விஜய்- 66 டீம்?! - ஓ... இதுதான் காரணமா?!
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் ‘விஜய்- 66’ படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பீஸ்ட் படத்தையடுத்து நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார். இது நடிகர் விஜய்க்கு 66ஆவது படம்.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு நாயகி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பப் படமாக உருவாகவுள்ள இதில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்கவுள்ளாராம்.
இதனிடையே விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் இதில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுவந்த நிலையில் அத்தகவலில் உண்மையில்லை என புதிய தகவல் வெளியானது. இதையடுத்து படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், நடிகர் ஷ்யாம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கு இதில் இரு அண்ணன்கள் எனக் கூறப்படுவதால் அதில் ஒருவராக ஷ்யாம் நடிப்பாரா அல்லது வேறு ரோலா என இனிமேல்தான் தெரியவரும். நடிகர் ஷ்யாமைப் பொறுத்தவரை, அண்மைக்காலமாக அவர் அதிக படங்களில் நடிப்பதில்லை. கைவசமும் பெரிதாகப் படங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘பார்ட்டி’ படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் அப்படமும் ரிலீஸாகாமல் பல காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | KGF-2 இனி ஹவுஸ்ஃபுல் ஆவது கஷ்டம்தானாம்- ஏன் தெரியுமா?!
ஷ்யாம் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளது இது முதன்முறை கிடையாது. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’ படத்தில் விஜய்க்கு நண்பராக சிறிய ரோலில் வந்துபோவார் ஷ்யாம். ஷ்யாம் முதன்முதலாகத் திரையில் தோன்றிய படமும் விஜய்யின் ‘குஷி’தான்.
‘குஷி’ வெளியாகி சுமார் 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அக்கூட்டணி தற்போது மீண்டும் இதில் இணையவுள்ளதாம். இந்தக் காம்போவில் உருவான ‘குஷி’ வெற்றிப்படமாக அமைந்ததைப் போல ‘விஜய்-66’ படமும் வெற்றிப்படமாக அமையுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்தோட ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இதுதானாம்!