கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 


படப்பிடிப்பை முடித்து, விரைவில் இசை வெளியிட்டு விழா, மற்றும், டிரெய்லர் வெளியீடு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.