`சுட்டு பிடிக்க உத்தரவு` குடும்பத்தில் இணையும் அடுத்த பிரபலம்!
படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்கள் பற்றி மற்ற தகவல்கள் வெளியாக வில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!
இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் சுசிந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடிக்கும் "சுட்டு பிடிக்க உத்தரவு" திரைப்படத்தில் நடிகை அதுல்யா ரவி நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது!
முன்னதாக கடந்த டிச., 7-ஆம் நாள் இப்படத்தினை குறித்த அறிவிப்பினை படக்குழுவினர் அறிவித்தனர். அப்போது இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் சுசிந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் மட்டுமே வெளியானது.
பின்னர் தற்போது இப்படத்தில் நடிகை அதுல்யா ரவி நடிக்கவுள்ளார் என இப்படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தினை Kalpataru Pictures தயாரிக்கின்றது. மேலும் இப்படத்தினை தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் ராம்பிரகாஷ் இயக்குகிறார்.
படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்கள் பற்றி மற்ற தகவல்கள் வெளியாக வில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!