ஜோடியாக சிக்கிக்கொண்ட எழில் - சுடர், எகிறிய பிபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்
Ninaithen Vandhai Today Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Ninaithen Vandhai TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் ரூமில் சுடர் குளித்துக் கொண்டிருக்க எழில் அதே ரூமுக்கு குளிக்க வர குளித்து முடித்து வெளியே வந்த சுடர் அவனைப் பார்த்து அதிர்ச்சியாகி சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது எழில் மற்றும் சுடர் என இருவரும் குழந்தைகள் ரூமில் சிக்கிக் கொள்ள டோர் லாக் ஆகி விடுகிறது. இருவரும் சேர்ந்து சத்தம் போட வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி விடுகின்றனர். ஆளாளுக்கு கதவை திறக்க முயற்சி செய்ய முடியாமல் போக டூப்ளிகேட் சாவி செய்பவனுக்கு போன் போட்டு கூப்பிட அவன் இரவு நேரத்தில் வர முடியாது நாளைக்கு வருவதாக சொல்கிறான்.
இதனால் கனகவல்லி எழில் மற்றும் சுடர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உள்ளவே இருக்கட்டும் நாளைக்கு காலையில சாவி செய்பவனையோ அல்லது கார்பென்டரை கூப்பிட்டு கதவை திறந்து விடலாம் என்று சொல்கிறாள்.
இதனால் மனோகரி பயங்கர கடுப்பாகிறாள். குழந்தைகள் தூங்கப் போக அப்போது சுடர் டிக் டிக் யாரது என்று கதவு பக்கத்தில் வந்து பேச அஞ்சலி நான் அஞ்சலி என்று சொல்கிறாள். பசிக்குது சாப்பாடு வேண்டும் என்று சொன்னதும் அஞ்சலி கீழே வந்து சொல்ல மாடியில் இருந்து பாக்ஸில் சாப்பாட்டை கட்டி அனுப்பி வைக்க ஜன்னல் வழியாக எடுத்து சாப்பிடுகின்றனர்.
செல்வி மனோகரியிடம் என்னமா நேத்து தான் உங்களுக்கு நிச்சயமாச்சு. இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள இருக்காங்க என்று ஏற்றி விடுகிறாள். அடுத்து மனோகரி அவளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபோனை போட்டு ரூமை திறக்க முயற்சி செய்ய எல்லோரும் நைட்டு நேரத்தில் வர முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.
இவர்கள் பேசுவதை பக்கத்தில் நின்று கேட்ட இந்த எழில் ரூம் சாவியும் குழந்தைகள் ரூம் சாவியும் ஒன்றுதான் என்று சொல்கிறாள். அது மனோகரி காதுக்கு விழாத நிலையில் தீபா மூலமாக விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க - நடு இரவில் ரம்யா.! கவலையே படாத தீபாவை போட்டு தள்ளிடலாம் -கார்த்திகை தீபம் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ