Tamil Serial Ninaithen Vandhai Latest Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது எழில் மற்றும் சுடர் என இருவரும் ரூமுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்க மனோகரி உச்சகட்ட டென்ஷனில் வெளியில் தூக்கமின்றி தவிக்க செல்வி கதவின் மீது காதை வைத்து உள்ளே என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள்.


பிறகு செல்வி சத்தமே கேக்கல என்று சொல்லி மனோகரியின் டென்ஷனை அதிகமாக்குகிறாள். சாப்பிட்டு முடித்த இருவரும் உள்ளே அப்படியே தூங்கி விடுகின்றனர்.


அடுத்ததாக இந்து வேக வேகமாக வீட்டுக்கு வந்து தீபாவை தட்டி எழுப்ப அவள் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து கொள்கிறேன் என்று சொல்கிறாள். இந்து அவளுக்காக காத்திருந்து மீண்டும் தட்டி எழுப்ப மீண்டும் கொஞ்ச நேரம் அவகாசம் கேட்டு தூங்கி விடுகிறாள்.


இப்படியே நேரம் ஓட ஒரு கட்டத்தில் இந்து தீபாவை எழுப்பி கனகவல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். தீபா கெட்டப் மாற்றி வருவதை பார்த்த கனகவல்லி வாங்க வாங்க உங்களுக்காக தான் காத்துக் கொண்டு இருக்கோம். எப்படியாவது ரூம் கதவை திறந்து விடுங்கள் என்று சொல்கிறாள்.


அடுத்ததாக தீபா பூஜை செய்து கதவைத் திறக்க எனக்கு பீட்சா வேண்டும் பர்கர் வேண்டும் ஜூஸ் வேண்டும் என ஒவ்வொன்றாக கேட்க அவற்றை ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.


பிறகு விபூதியை எடுத்து செல்வி முகத்தில் ஊதி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி.. சமூக மாற்றத்திற்காக முதல் அடியை எடுத்து வைத்த சந்தியா ராகம் சீரியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ