தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் குழந்தைகள் மூவரும் ராமையாவுடன் சேர்ந்து பார்க்குக்கு சென்று விளையாடிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது குழந்தைகள் எல்லோரும் பலூன் உட்பட விளையாட்டு பொருட்களுடன் வீட்டிற்கு வர எழிலின் கார் வெளியே நிற்பதை பார்த்து ஷாக்காகின்றனர். உடனே அபி எல்லாரும் ஸ்கூலுக்கு தான் போயிட்டு வந்ததாக பொய் சொல்லணும் அழுது மாட்டிக்க கூடாது என்று சொல்லி வீட்டிற்குள் கூட்டி செல்கிறாள். 



பிறகு எழில் இடம் சாதாரணமாக பேசிவிட்டு மேலே செல்லும் போது எனில் மூன்று பேரையும் கூப்பிட்டு எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க ஸ்கூலுக்கு தான் போயிட்டு வரும் டாடி என கோரசாக பொய் சொல்கின்றனர். டிரஸ் எல்லாம் எதுக்கு அழுக்கா இருக்கு என்று கேட்க ஸ்போர்ட்ஸ் டே அதனால பிராக்டிஸ் போயிருந்தோம் என்று பொய் சொல்கின்றனர். 


நான் 100 மீட்டர் ரன்னிங் போயிருந்தேன் ஆயிரம் மீட்டர் ரன்னிங் போய் இருந்தேன் என்று அளந்து விட எழில் அப்படின்னா ஒரு சப்ரைஸ் என்று சொல்லி மூவரையும் கூட்டிக்கொண்டு ஒரு கிரவுண்டுக்கு வந்து அவர்களை ஓடவிட்டு பனிஷ்மென்ட் கொடுக்கிறான். 


மேலும் படிக்க | Seetharaman Serial Update: ஜெயிலில் அடைக்கப்பட்ட பின்னரும் ராமுக்காக சீதா செய்த விஷயம்!


மறுபக்கம் ஊரிலிருந்து தப்பிய சுடர் ஒரு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பெண் தனது பேக்கை பஸ்லையே வைத்துவிட்டு பாதியில் இறங்கி விடுகிறாள். சுடர் அந்த பேக்கை எடுத்து பார்க்கையில் அதற்குள் சர்டிபிகேட் உள்ளிட்டவை இருக்கிறது. 



இந்த நேரத்தில் அந்த பெண்ணின் போன் ரிங்காக இந்த பக்கம் சுடரும் அந்த பக்கம் எழிலும் பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | ‘கங்குவா’ பட நடிகருக்கு கிஸ் கொடுத்த ரசிகை..வைரலாகும் வீடியோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ