தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் சுடருடன் மாலுக்கு வர எழில் குழந்தைகள் காணவில்லை என தகவல் அறிந்து தேட தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது மாலுக்கு வந்த குழந்தைகள் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசைப்பட சுடர் எல்லாருக்கும் வாங்கி கொடுத்து விட்டு விலையை கேட்க 1500 ருபாய் என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறாள், என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல 60 ரூபாய் தான் இருக்கு என்று சொல்லி தவிக்க கவின் எங்க கிட்ட பணம் இருக்கு என்று எடுத்து கொடுக்கின்றனர். 


மேலும் படிக்க | Lal Salaam: ‘லால் சலாம்’ ரஜினிகாந்தின் சம்பளம்..கேமியோ ரோலில் நடிக்க ‘இத்தனை’ கோடியா?


அதனை தொடர்ந்து உள்ளே சென்று கேம்ஸ் விளையாடி சந்தோஷமாக இருக்கின்றனர், குழந்தைகள் ஹாப்பியாக இருப்பதை பார்த்து ரசிக்கிறாள் சுடர். மறுப்பக்கம் கனகு போன் செய்து குழந்தைகள் கிடைச்சிட்டாங்களா? இல்லையா என்று விசாரித்து நீ அன்பா இருந்து இருக்கலாம் என்று திட்டுகிறார். இங்கே எல்லாரும் சாப்பிட வர சுடர் காசு இல்லை என்று சொல்ல குழந்தைகள் எங்ககிட்ட இருக்கு என்று விதவிதமாக ஆர்டர் செய்து சாப்பிட தொடங்குகின்றனர். 


அங்கே ஒரு அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதை பார்த்த அஞ்சலி அம்மாவை நினைத்து பீல் செய்து சாப்பிடாமல் இருக்க சுடர் விளையாட்டின் மூலமாக அவளுக்கு அம்மாவாக மாறி சாப்பிட வைக்கிறாள். அடுத்து அபிக்கு அம்மா ஞாபகம் வர எல்லாரும் துணி கடைக்கு செல்கின்றனர். இந்த கடையில் அஞ்சலி காணாமல் போய் விட எல்லாரும் பதற்றம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ