நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் : ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் நான்கு பேரும் எழில் ரூமை விட்டு வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, கவின் மற்றும் அஞ்சலி என இருவரும் ஒரு தாத்தா பாட்டி உடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது எழில் அதை பார்த்துவிட அப்பாவை பார்த்த காவியா ஓடி ஒளிந்து கொள்கிறாள். கவின் மற்றும் அஞ்சலி என இருவரும் எழிலிடம் மாட்டிக்கொள்ள அஞ்சலி அவர்களை சைகையில் கிண்டல் அடித்துவிட்டு அபியை தேடிச் செல்ல ஒரு இடத்தில் அபியை பார்த்தது கவின் மற்றும் அஞ்சலி இரண்டு பேரும் அப்பாகிட்ட மாட்டிகிட்டாங்க வா நாம அப்பாவோட ரூமுக்கு போயிடலாம் என்று கூப்பிடுகிறாள்‌.


அதன் பிறகு இருவரும் பயந்து ஓட காவியா லிப்ட்ல போயிடலாம் என்று லிப்டுக்குள் செல்ல லிப்ட் அண்டர் மெயிண்டன்சில் இருப்பது அபிக்கு தெரிய வந்து வெளியே வா என்று அஞ்சலியை கூப்பிட அஞ்சலி வெளியே வருவதற்குள் கதவு மூடிக்கொண்டு மேலும் கீழுமாக லிப்ட் நகர்கிறது. 


மேலும் படிக்க | Vijay: பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்! ஆரவார அலப்பறையுடன் வரவேற்ற ரசிகர்கள்..


எழில் அங்கு வந்து விட லிப்ட் மெயின்டன் செய்பவர்களுக்கு போன் போட்டு காவியாவை வெளியே கொண்டு வர முயற்சி செய்ய அவர்கள் சிலர் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் வாங்க மீண்டும் கொஞ்ச நேரம் ஆகும் என சொல்லி விடுகின்றனர். 


இதனால் எழிலே தனது கையால் லிஃப்டை ஓபன் செய்து காவியாவை காப்பாற்ற போக அப்பாவை பார்த்ததும் காவியா தெரியாம வந்துட்டேன் அப்பா மன்னிச்சிடுங்க என்று பயந்து போய் கெஞ்சி நடுங்க எழில் அம்மா பாட்டு போட்டு காவியாவை கூல் செல்கிறான். 


பிறகு மற்ற குழந்தைகளை பிடித்து திட்டி ராமையாவிடம் குழந்தைகளை கூட்டிச் செல்ல சொல்ல சுடர் நானும் அம்மாவை இழந்த பொண்ணுதான். என்னை வளர்த்தது எங்க அப்பா தான். 


அவருடைய பாசத்துல நான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன் அப்படி இருக்கும்போது இங்க ஏன் உங்க பிள்ளைங்க கிட்ட பாசமா இருக்க மாட்டீங்க என அட்வைஸ் கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள் லிஸ்ட்! யார் குக்-யார் கோமாளி? முழு பட்டியல்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ