துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அடுத்தடுத்து சரியான படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறினார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படம் வெளியாகியுள்ளத. இந்த படத்தில் அதர்வா முரளி, அம்மு அபிராமி சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, ஶ்ரீஜித் சரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒருபக்கம் தனுஷ், மறுபக்கம் நயன்.. அந்த பக்கம் பாத்தா SK, அனி! தயாரிப்பாளர் திருமணத்தில் திடுக்


மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வெவ்வேறு கதைகள் நடக்கிறது. முதல் கதையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவர் காலையில் டியூசனுக்கு செல்கிறார். அப்போது ஒரு இளம் பெண்ணை நான்கு பேர் காரில் கடத்தி செல்கின்றனர். பயத்தில் அவர் வீட்டுக்கு ஓடி வர பிறகு தான் தெரிகிறது கடத்திச் செல்லப்பட்டது தனது காதலி என்று. இன்னொரு கதையில் எப்படியாவது இயக்குனராக ஆக வேண்டும் என்று அதர்வா முயற்சி செய்து வருகிறார். இதற்காக ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கிறார், இவருக்கு உறுதுணையாக இரண்டு நண்பர்கள் உள்ளனர். மற்றொரு கதை போலீஸின் இன்ஸ்பெக்டராக இருக்கும் சரத்குமார் அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்ட ஒரு கேசை விசாரிக்கிறார். இந்த மூன்று கதைகளும் ஒரு இடத்தில் ஒன்றாக இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நிறங்கள் மூன்று படத்தின் கதை. 



இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களை தாண்டி கதை சொல்லப்பட்ட விதம் தான் படத்தை காப்பாற்றுகிறது. இதற்கு இயக்குனர் கார்த்திக் நரேனிற்கு தனி பாராட்டுக்கள். தனது முந்திய படங்களில் தான் செய்த தவறை இந்த படத்தின் சரி செய்து சிறப்பான ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் எவ்வாறு மாறுகின்றனர் என்பதை இந்த படம் மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறார். படத்தின் ஹீரோ அதர்வா படம் ஆரம்பித்து 30 நிமிடங்களுக்கு பிறகு தான் திரையில் தோன்றுகிறார். எப்போதும் சிகரெட், கஞ்சா என போதையில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். 


இந்த கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்ததற்கு இயக்குனர் மீது இவர் வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். அதர்வாவுடன் வரும் இரண்டு நண்பர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பள்ளி ஆசிரியராக வரும் ரகுமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை வைத்து கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாக்காத விதத்தில் இருந்தது.  போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வழக்கம்போல பல இடங்களில் கைத்தட்டல்களைப் பெறுகிறார். இவரை வைத்து வரும் ஒரு டிவிஸ்டும் எதிர்பாக்காதபடி அமைந்து இருந்தது. பள்ளி மாணவர்களாக வரும் 3 பேரும், அம்மு அபிராமியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சில இடங்களில் காமெடி ஒர்க் ஆகி இருந்தது.


ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. நிறங்கள் மூன்று படத்தில் தனியாக எந்தவித பாடல்களும் இல்லை என்றாலும், பின்னணி இசை தேவையான அளவிற்கு இருந்தது. பள்ளி மாணவர்கள், இயக்குனராக துடிக்கும் ஒரு இளைஞர், பள்ளி ஆசிரியர், போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இரண்டாம் பாதையில் சில இடங்கள் மெதுவாக நகர்ந்தாலும் கிளைமாக்ஸில் அனைத்தையும் மறக்கடிக்க செய்கிறார். இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.


மேலும் படிக்க | ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ