மாதவன் நடிப்பில் உருவாகும் `ராக்கெட்ரி` - teaser வெளியானது!
இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி திரைப்படத்தின் டீஸர் வெளியானது!
இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி திரைப்படத்தின் டீஸர் வெளியானது!
இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன். கடந்த1994-ஆம் ஆண்டு வேறு நாட்டிற்கு தகவல் கொடுத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு CBI விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடைசியாக 1998-ஆம் ஆண்டு இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
சமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் அதில் வெற்றி பெற்ற நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தை 'Ready to fire: How India and I survived the ISRO spy case' என்னும் பெயரில் புத்தகமாக நம்பி நாராயணன் எழுதியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க இயக்குநர் ஆனந்த் மகாதேவன் விருப்பம் தெரிவிக்க, நம்பியும் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகும் இத்திரைப்படத்தில் மாதவன் நடிக்கின்றார்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!