நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை தொடர்ந்து, தற்போது ஹாலிவுட் ஸ்டைல் படமாக டெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்யா, சாயிஷா நடித்துள்ள இந்த டெடி திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.


தனது திரைப்படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட இயக்குநர் இந்த திரைப்படத்திலும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் டெடி எனப்படும் கரடி பொம்மை மனிதர்களுடன் சகஜமாக உரையாடுவது போல் திரைக்கதையினை அமைத்துள்ளார். 



குழந்தைகளின் பிரயமான பொம்மைகளில் ஒன்றாக கருதப்படும் டெடி பொம்மை தன்னுடன் பேசவேண்டும் என விரும்பும் சிறுவனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான ஹாலிவுட் திரைப்படம் டெட் மற்றும் இதன் தொடர்ச்சி டெட்-2. இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலைப்போல் தற்போது தமிழில் டெடியை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் சக்தி சௌந்தர்.



இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசரை பார்க்கும் போதே நிச்சயம் குழந்தைகள் மத்தியில் படம் ரிஜிஸ்டர் செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் குழந்தைகளுக்கான பரிசாக இந்த திரைப்படம் வெளியாகி வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்...