கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ‘தம்பி’ திரைப்படத்தின் teaser...
நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘தம்பி’ திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘தம்பி’ திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கள், கைதி என கதாப்பாத்திரத்திற்கு முக்கியதுவம் அளித்த கதைகளினை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் தற்போது தம்பி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான பாபநாசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கார்த்தியின் சகோதரியாக நடித்துள்ளதாக தெரிகிறது. இவர்களுடன் சத்தியராஜ், சௌக்கார் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி - த்ரிசா நடிப்பில் உருவான 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸ்ந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தின் டீஸரினை மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் நாகர்ஜூனா மற்றும் தமிழில் நடிகர் சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர.
டீஸரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் படி திரைப்படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகா குதிரை மேல் சவாரி செய்யும் காட்சி பலரது கவணத்தை ஈர்த்துள்ளது. மேலும் சகோதரன், சகோதரி இடைய நிகழும் பாசப் போராட்டங்களை கொண்ட காட்சிகளுடன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "அன்பு எல்லத்தையும் மாத்தும் சரவணா" என்னும் ரசிகர்கள் மத்தியில் ட்ரண்ட் ஆகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இத்திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.