Johnny திரைப்படத்தின் ஆக்ஷன் trailer வெளியானது!
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜானி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!
தமிழ் திரையுலகின் சாக்லெட் ஹீரோ பிரசாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சாகசம் திரைப்படத்திற்கு பின்னர் தற்போது திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஜானி. பாலிவுட் நடிகர் நெய்ல் நித்தின் முகேஷ் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜானி கட்டார். இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜானி என தகல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தின் பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரபு, சாயாஜி ஷிண்டே, அசுதோஷ் ரானா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘நான், எமன்' புகழ் இயக்குநர் ஜீவா ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார். ‘ஸ்டார் மூவீஸ்' நிறுவனம் சார்பில் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இதனை தயாரித்துள்ளார்.
சமீபத்தில், வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.