தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர், விஜயகாந்த். சினிமாவைத்தாண்டி மக்கள் பணியிலும் ஆர்வம் காட்டிய இவர், தேமுதிக கட்சியின் தலைவராக விளங்கினார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், இன்று காலை உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது (Vijayakanth Death). இதை கேட்டதில் இருந்து ரசிகர்களும், தேமுதிக கட்சியின் தொண்டர்களும் மனமுடைந்து போயுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் விஜயகாந்த்:
கடந்த 1979ம் ஆண்டு வெளியான 'அகல் விளக்கு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஜயகாந்த். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சண்டை காட்சிகளையும், ஸ்டண்ட்களையும் அசால்ட்டாக செய்வதில் வல்லவர். இவர் சிறந்த நடிப்புக்கும், சண்டை காட்சிகளுக்கும் புகழ்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் நடனத்திலும் சிறந்தவர் என்பது பலருக்கு தெரியாது. கடந்த 1992ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்ரியா நடிப்பில் 'பரதன்' என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


மேலும் படிக்க | RIP Vijayakanth: கறுப்பு நிறம்.. சிரித்த முகம்... கம்பீர நடை... கணீர் குரல்..! -ஓய்வெடுங்கள் கேப்டன்


வைரலாகும் வீடியோ:
இந்த படத்திலுள்ள 'புன்னகையில் மின்சாரம்' என்ற பாடலுக்கு விஜயகாந்த் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார். நடன இயக்குநர் பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். அதுவரை பார்த்திராத விஜயகாந்த்தின் ஸ்டைலான நடனத்தை அந்த பாடலில் கொண்டு வந்திருந்தார் பிரபு தேவா. மேலும் இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், தமிழ் சினிமாவில் அதிகமான ஷாட்ஸ் பயன்படுத்தப்பட்ட ஒரே பாடல் இதுவாகும். அதிக ஷாட்ஸ் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 180 கட்ஸ்கள் இதில் உள்ளன. விஜயகாந்தா இப்படி ஆடியிருக்கிறார்..! என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும் அந்த பாடல் இப்போது வைரலாகி வருகிறது.



இந்த பாடல் இப்பொழுதும் youtube தளத்தில் மிகவும் டிரெண்டாக உள்ள ஒரு பாடல் தான், இந்த பாடலை பார்க்கும்பொழுது இதில் நடனம் ஆடுவது விஜயகாந்தா அல்லது மைக்கேல் ஜாக்சனா என்கின்ற சந்தேகமே நமக்கு எழும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தியாக தனது நடன திறமையை காண்பித்து இருப்பார் விஜயகாந்த். அதுமட்டுமின்றி இந்த திரைப்பட பாடல் நடிகர் விஜயகாந்த் அவருடைய திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாகும். மேலும் இயக்குநருக்கு ஏற்ற நடிகர் விஜயகாந்த் என்பதை உணர்த்தும் விதமாக இந்த பாடலில் கடினமான நடன அசைவுகளையும் தனது பாவனைகளுக்கு ஏற்ப கலக்கலாக விஜயகாந்த் ஆடி இருப்பார்.


விஜயகாந்த்துக்கு ஆட தெரியுமா? என்று கேள்வி கேட்பவர்கள் சற்று இந்த பாடலை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களிலுமே அசாதாரணமான ஸ்டெப்ஸ்களை சாதாரணமாக விஜயகாந்த் அடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரபலங்கள்-அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்:
இதனிடையே நடிகர் விஜயகாந்தின் உயிரிழப்பு, தமிழகத்திற்கே பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, ம.நீ.ம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இவரது மறைவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


உடல் நல்லடக்கம் செய்யப்படுவது எப்போது? 
நடிகர் விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் நல்லடக்கம் செய்ய அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அனுமதி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், நாளை மாலை 4:40 மணியளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விஜயகாந்தின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ