விராட் கோலி, அனுஷ்கா சர்மா இடையே திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியானது. இந்த திருமணம் எங்கு நடக்கும், யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகாமல் இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவர் திருமணம் இந்த மாத இறுதிக்குள் நடக்க இருப்பதாகும், 14, 15 தேதிகளில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.


மேலும் இந்த திருமணம் இத்தாலியில் நடப்பதாக முதலில் தகவல் வெளியானது. அதேபோல் அனுஷ்கா சர்மா இத்தாலிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். மேலும் கோலியின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இத்தாலிக்கு சென்று இருக்கின்றனர். 
இந்த திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் யாரும் அழைக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய அணி இலங்கை தொடரில் இருப்பதால் இந்திய வீரர்கள் யாரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. 


தற்போது இந்த திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் யுவராஜ் சிங் அழைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.