ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக் திரைப்படம், 88 வயதுடைய Ocean Linear கப்பலில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல Cunard/White Star Line கப்பல் நிறுவனத்தின் Ocean Linear கப்பலானது டைட்டானிக் கப்பலை போன்றே வடிவமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கப்பலில் ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக் திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அட்லாண்டிக் பெருங்கடலினை சுமார் 1001 முறை கடந்த இந்த Ocean Linear தற்போது உணவு விடுதியாகவும், கப்பல் சம்பந்தப்பட்ட அரிய வகை பொருட்களை கொண்டிருக்கும் அருங்காட்சியகமாகவும் மாறிவிட்டது. கப்பல் அனுபவத்தினை பெற விரும்புவோர் இந்த கப்பலினை ஒரு முறை பார்வையிட்டால் போதும் என கூறப்படகிறது.


இந்த கப்பலில் தற்போது பிரசிதிப் பெற்ற திரைப்படங்கள் மட்டும் அவ்வப்போது திரையிடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஏப்ரல் 21-ஆம் நாள் 1997-ஆம் வெளியாகி விருதுகள் பல குவித்த டைட்டானிக் திரைப்படம் இந்த கப்பலில் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.