92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது Once upon a time in Hollywood என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் அகாடமி விருது. 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


இந்நிலையில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. Once upon a time in Hollywood என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியத்ற்க விருது வழங்கப்பட்டுள்ளது.