ஆஸ்கார் 2020: ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகர்
92வது ஆஸ்கார் விருதுகள் 2020 வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்சுக்கு வழங்கப்பட்டது.
92வது ஆஸ்கார் விருதுகள் 2020 வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்சுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் அகாடமி விருது. 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
92 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கு கிடைத்தது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோக்கர் (JOKER) படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருது வென்றார்.