மீண்டும் டிவிட்டருக்கு திரும்பினார் ஓவியா
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்திற்கு திரும்பி உள்ளார்.
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்துவிட்டார். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஓவியா மீண்டும் தனது டிவிட்டர் தளத்திற்கு திரும்பியுள்ளார். சமூகவலைத்தளத்தில் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
தனது முதல் டிவீட்டாக ஓவியா கூறியிருப்பதாவது:-
உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து பெறும் அன்புக்கும் அக்கறைக்கும் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, நான் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பினாலும் மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.