தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து, அதனை நடத்திவரும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து நிருபர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில்., "என்னை கைது செய்தால், சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்று கூறியதுடன், தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.


கமலின் கருத்துக்கு சட்டத் துறை அமைச்சர் சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.


கமலின் கருத்துக்கு தமிழக எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அதரவு தெரிவித்தார்.


இந்நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வம், கே.பி முனுசாமி ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஒ.பன்னீர் செல்வம் கூறும்போது, "முதல்வர் தலைமையிலான அரசின் மீது நடிகர் கமல் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர, அவர் மீது குறை சொல்லக் கூடாது. கமலை மிரட்டுகின்ற தொனியில் அமைச்சர்கள் பேச கூடாது" என்றார்.