ஆஸ்கர் விருதுகள் 2020: 4 விருதுகளை வென்றது பாரசைட்
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாரசைட் என்ற படத்துக்குச் சென்றுள்ளது.
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாரசைட் என்ற படத்துக்குச் சென்றுள்ளது.
சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் அகாடமி விருது. 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
92 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கு கிடைத்தது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது, பாரசைட் (Parasite) படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதிய போங்க் ஜூன் -ஹோ மற்றும் ஹான் ஜி-வோன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏற்கனவே சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கொரியன் படம் பாரசைட் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1917 படம் 3 ஆஸ்கர் விருதுகளையும், ஜோக்கர் படம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.