பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பில் வெளியான, பரி திரைப்படம் முதல் நாள் வசுலாக சுமார் ரூ.4.36 கோடி வசூளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிமுக இயக்குநர் ப்ரோசிட் ராய் இயக்கத்தில், நடிகை அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான திரைப்படம் 'பரி'. ஹாரர் பானியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அனுஷ்கா ஷர்மா அனைவரையும் தன் நடிப்பால் பயம்மூற்றியுள்ளார்.



மேலும் இப்படத்தில் பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்து உள்ளனர். முன்னதாக பரி படத்தின் ஃபரஸ்ட் லுக் மற்றும் இரண்டு டீஸர்கள் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.


இதனையடுத்து நேற்று ஹோலி தினத்தினை முன்னிட்டு "பரி" திரைப்படம் நேற்று வெளியானது. இத்திரைப்படமானது முதல் நாள் வசூலாக ரூ.4.36 கோடி குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!