இந்த ஆண்டின் பீட்டா பிரபலம் என்ற விருதை பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளின் நலனுக்கு ஆதரவான பணிகளில் அனுஷ்கா ஈடுபட்டுள்ளதாக பீட்டா அமைப்பின் இணை இயக்குனர் சச்சின் பங்கரா தெரிவித்துள்ளார். 


மகாராஷ்ட்ராவின் பல பகுதிகளில் குதிரை வண்டிகளில் கூடுதல் சுமை ஏற்றப்படுவதன் மூலம் குதிரைகள் துன்புறுத்தப்படுவதை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். விலங்கு நல அமைப்பான பீட்டாவின் ஆண்டு விருதை இதற்கு முன் நடிகர் மாதவன், நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.


அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா விலங்குகளின் நலனுக்கு ஆதரவான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இந்த ஆண்டின் பீட்டா பிரபலம் என்ற விருதை அவர் பெற்றுள்ளார்.