Tamil Pongal Song: பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்று. போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அதாவது, மார்கழியின் கடைசி நாளும், பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளுமான போகி பண்டிகை அன்று பழைய பொருள்களை விடுத்து புதியவற்றை வீடுகளில் வாங்குவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாட்டு பொங்கல் உழவுக்கு உதவுக்கு மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அன்று சுற்றுலா செல்வது என பூமியை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. 


எனவே, தமிழர்களின் கொண்டாட்டங்களில் பொங்கலுக்கு இத்தனை சிறப்புகள் இருக்கும்போது, அவை தமிழ் சினிமாவிலும் பிரதிபலிப்பது இயல்புதான். அந்த வகையில், பொங்கல் பண்டிகை சார்ந்து தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்கள் குறித்து இதில் காணலாம். 


காட்டுக்குயிலு  மனசுக்குள்ளே...


தமிழர்களின்  கொண்டாட்டங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் இளையராஜா. அவர் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கி, ரஜினி, மம்மூட்டி நடித்து வெளிவந்த 'தளபதி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' பாடல் போகி பண்டிகைக்கான கீதமாகவே மாறிவிட்டது. அந்த பாடலின் காட்சிகள், இசை பின்னணி, நடனம் என அனைத்தும் போகி பண்டிகையின் துள்ளலை கொண்டிருக்கும். வாலியின் எழுத்துதான் அந்த பாடலின் அத்தனை துள்ளலுக்கும் அடிதளமாக அமைந்திருக்கும். 


தைப் பொங்கலும் வந்தது... பாலும் பொங்குது... பாட்டு சொல்லடியோ...


போகி பண்டிகைக்கு ரஜினி என்றால், தைப்பொங்கலுக்கு கமல் ஹாசன் என சொல்லலாம். அவர் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான 'மகாநதி' படத்தில் இடம்பெற்ற 'தைப் பொங்கலும் வந்தது... பாலும் பொங்குது... பாட்டு சொல்லடியோ...' பாடல் தைப்பொங்கல் அன்று வீடுகள், வீதிகள்தோறும் ஒலிக்கும் எனலாம். இந்த பாடலும் இளையராஜாவின் இசை, வாலியின் எழுத்து என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக என் மனசு தங்கம்


ரஜினியின் 'முரட்டு காளை' படத்தில் வரும் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலும் ஜல்லிக்கட்டு தோறும் இசைக்கப்படும் பாடல்களில் ஒன்று. ஒரு மாடுபிடி வீரர் வெற்றிவாகை சூடி சொந்த ஊரில் வலம்வரும் பின்னணியில் வரும் இந்த பாடல் இளைஞர்களின் தேர்வில் நிச்சயம் இடம்பெறாமல் போகாது. அன்றும் இன்றும் என்றும் ரஜினி - இளையராஜா - பஞ்சு அருணாச்சலம் கூட்டணியில் வந்த இந்த பாடல் கேட்போரை குத்தாட்டம் போட செய்யும். 


மேலும் படிக்க | Pongal 2023: பொங்கல் முதல் இந்த ராசிகளுக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும்


போக்கிரி பொங்கல்


தமிழர் திருநாளான பொங்கல் என்பது ஒரு மதம் சார்ந்த பண்டிகை அன்று என்பதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கலிடப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட சமத்துவ பொங்கலை வலியுறுத்தும் வகையில் விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான,'போக்கிரி' படத்தின் 'போக்கிரி பொங்கல்' பாடலை கூறலாம். அதன் வரிகளும், விஜய்யின் நடன அசைவுகளும் உங்கள் நரம்புகளை புடைக்க செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த பாடல் மணிசர்மாவின் இசையிலும், கபிலனின் வரிகளும் படைக்கப்பட்டது. 


இவை மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள், லேட்டஸ்ட் ஜல்லிக்கட்டு தடையையொட்டி வந்த ஹிப்ஹாப் தமிழாவின் 'டக்கரு டக்கரு' பாடல் என பல பாடல்கள் இந்த வரிசையில் வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | சிவன்மலை பெட்டியில் வந்திருக்கும் நெற்கதிர்கள்; முருகப்பெருமான் உத்தரவு சொல்வது இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ