பிரபாஸ்-கு ஜோடியாகும் `பத்மாவத்` நடிகை தீபிகா படுகோண்
பிரபாஸின் முதல் பாலிவுட் படத்தில் இந்திய சினிமாவின் முன்னினி நடிகையான தீபிகா படுகோண் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
பிரபாஸின் முதல் பாலிவுட் படத்தில் இந்திய சினிமாவின் முன்னினி நடிகையான தீபிகா படுகோண் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சரத்தா கபூர் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரபாஸ், இதில் இவருக்கு ஜோடியாக அனுஷா ஷெட்டி நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாலிவுட் படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். பிரபாஸின் முதல் பாலிவுட் படத்தில் இந்திய சினிமாவின் முன்னினி நடிகையான தீபிகா படுகோண் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த எந்த அதிகாரபூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தீபிகா படுகோண் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் 'பத்மாவத்' பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் நடித்ததின் மூலம் பிரபாஸ் உலக முழுவதும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.