புதுடெல்லி: பாகுபலி புகழ் பிராபாசின் (Prabhas) ரசிகர்களுக்கு ஒரு மகிழ்சிகரமான செய்தி வந்துள்ளது. அவரது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளி வந்துள்ளது. ‘ராதே ஷ்யாம்’ மற்றும் தீபிகா பதுகோனுடனான மற்றொரு படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தை ‘தான்ஹாஜி’ என்ற ஹிந்தி படத்தை இயக்கிய ஓம் ராவுத் (Om Raut) இயக்கவுள்ளார்.


செவ்வாய்க்கிழமை காலை 7.11 மணிக்கு ரசிகர்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பு காத்திருக்கிறது என பிரபாசும் ஓம் ராவுத்தும் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து ‘ஆதிபுருஷ்’ (Adipurush) என்ற படத்தில் பணிபுரிய உள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.


'ஆதிபுருஷ்' பிரபாஸின் 22 வது படமாகும். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. "தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றிக் கொண்டாட்டம்” என்பது இப்படத்தின் டேக் லைனாகும்.


தற்போது, பிரபாஸ் 'ஆதிபுருஷின்' ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்ந்துள்ளார்.



 


இது ஓம் ராவுத்துடன் பிரபாஸ் இணைந்து பணிபுரியும் முதல் படமாகும். இப்படம் ஒரு 3D படமாக எடுக்கப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்படும் ஆதிபுருஷ் திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என அறியப்படுகிறது.


'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டில் துவங்கும். இப்படத்தை 2022 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.


ALSO READ: HBD Shankar: பிரம்மாண்டத்தின் காதலன், எந்திர மனிதன், இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் இன்று!!


இதற்கிடையில், வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் கூறுகையில், "'ஆதிபுருஷ்' என்பது ஒரு இந்திய காவியத்தின் பெரிய திரைத் தழுவலாகும். தீமைக்கும் நன்மைக்கும் எதிரான போரில் நன்மை அடையும் வெற்றியைப் பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.



'ஆதிபுருஷ்' படத்தை பூஷன் குமார் இணைந்து தயாரிக்கிறார். இவர் பிரபாஸுடன் 'சாஹோ' படத்திலும் பணியாற்றினார். 'ராதே ஷியாம்' படத்திலும் இவர்கள் ஒன்றாக பணியாற்றினார்கள்.


தற்போது வெளிவந்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


ALSO READ: நடிகர் சிவகார்த்திகேயனை எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிடுவதற்கான காரணம் தெரியுமா?