ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மத்தியில் பிரபுதேவாவுக்கு தனி இடம் உண்டு. தனது நடனத்தால் ரசிகர்களின் இதயங்களை கட்டிப்போட்ட அவர், தன் நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
பிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா.
'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மத்தியில் பிரபுதேவாவுக்கு தனி இடம் உண்டு. தனது நடனத்தால் ரசிகர்களின் (Fans) இதயங்களை கட்டிப்போட்ட அவர், தன் நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
தற்போது அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா (Prabhudeva) கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ALSO READ: Palindrome: பிரபுதேவாவின் வினோதன் திரைப்படத்தில் இருவழி ஒக்குஞ்சொல் அமைந்த முதல் பாடல்
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தைப் பற்றி இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில், “பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக (Tamil Film) இந்த படம் தயாராகிறது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும்.'' என்று கூறினார்.
ALSO READ: திருப்பதியில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்: வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR