பாரத ரத்னா விருதுக்கு பிறகு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், பத்ம விபூஷன் விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேர்வாகியிருந்தார். கர்நாடக இசையுலகிலும், பின்னணி பாடலிலும் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கியதற்காக யேசுதாஸ் இந்த விருதுக்கு தேர்வாகியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 7 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.


இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தார். 


கே.ஜே.யேசுதாஸ் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். 1961-ம் ஆண்டு இசை வாழ்வை ஆரம்பித்த யேசுதாஸுக்கு தற்போது வயது 77. ஏற்கெனவே 1975-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2002-ம் ஆண்டு பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.