பிரபு தேவா-ன் ‘தேள்’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு!

பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் ‘தேள்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் ‘தேள்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஹரி குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேள்’. இந்தப் படம் பெரும்பாலும் மதுரையை சுற்றியே உருவாகவுள்ளது. இந்தப் படம் ஒரு கமர்சியல் படமாக அமையும். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் சார்பி. கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கவுள்ள இதற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். சமீபத்தில், இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் இன்று பிரபு தேவாவின் பிறந்த நாள் அன்று இந்த படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.