இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி பிரபல நடிகை ஒருவர் காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இது குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரித்விஷா மீது பாலியல் புகார்:


இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலமாக பலரது கவனத்தை பெற்று வருபவர் பிரித்வி ஷா. நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் மீது சில மாதங்களுக்கு முன்பு ஸ்வப்னா கில் என்ற நடிகையால் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. 


மேலும் படிக்க | எதிர்பார்க்காத நேரத்தில் சிவாங்கிக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு


போஜ்பூரி நடிகை:


பிரித்வி ஷா, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ்  என்ற நட்சத்திர ஓட்டலில் தனது நண்பர்களுடன் சாப்பிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த விடுதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த போஜ்பூரி நடிகையும் இன்ஸ்டா பிரபலமுமான ஸ்வப்னா கில் பிரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்வப்னா தனது நண்பர்களுடன் பிரித்வி ஷாவை காரில் பின் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவரது காரை நடுவழியிலேயெ இடை மறித்துள்ளார். இதையடுத்து, ஸ்வப்னாவின் நண்பர்கள் பிரித்விஷாவின் கார் கண்ணாடியை உடைத்து அவரையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரித்விஷா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து அந்த போஜ்பூரி நடிகையும் அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.


பாலியல் புகார்:


கைது செய்யப்பட்ட ஸ்வப்னா கில், சில மாதங்களுக்கு முன்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி புகார் ஒன்றை அளித்தார். அதில், சம்பவத்தன்று பிரித்வி ஷா குடி போதையில் இருந்ததாகவும் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைப்பெற்றது. 


பொய்யான புகார்:


நடிகை ஸ்வப்னாவின் புகாரை விசாரணை செய்த அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதிலிருந்துதான் இவர்களுக்கு விஷயமே தெரிந்துள்ளது. சம்பவத்தன்று ஸ்வப்னா கில் தனது நண்பர் சோபித் தாக்கூர் என்பவருடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்திவிட்டு நடனமாடியது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை சோபித் தனது மொபைலில் வீடியோ எடுப்பதும் பிரித்வி, வீடியோ எடுக்க வேண்டாம் என தடுப்பதும் சிசிடிவி காட்சிகளாக பதிவாகியுள்ளன. இதை வைத்து ஆராய்ந்த போலீஸார், அதில் ஸ்வப்னாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என கூறியுள்ளனர். மேலும் ஸ்வப்னா தனது நண்பர்களுடன் பேஸ்பால் பேட்டை வைத்து பிரித்வி ஷாவின் காரை துரத்தி செல்லும் காட்சி  வின்சிட்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இது ஒரு பொய் புகார் என்ற முடிவிற்கு போலீஸார் வந்துள்ளனர். 


மேலும் படிக்க | லியோ படத்திற்கு சிக்கல்.? போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ