பிரியங்கா சோப்ராவுக்கு மோதிரம் போடுகிறார் பாப் பாடகர் நிக் ஜோனஸ்?
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் ஃப்ரியங்கா சோப்ராவுக்கு நிச்சயம் என சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது.
தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் பாப் பாடகரான நிக் ஜோனஸ்சை திருமணம் செய்துகொள்வதாக சில மாதங்களாகவே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவர்கள் இருவரும் இன்றாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உலா வருவதாக முக்கிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இதைக்குறித்து இருவரும் இதுவரை கருத்து கூறவில்லை.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானின் "பாரத்" படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகி உள்ளதாக அப்படத்தின் இயக்குனரும், சல்மான் கானின் சகோதரர் அலி அப்பாஸ் ஜாபார் தெரிவித்துள்ளார். அதைக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,
"பாரத்" படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகிக் கொண்டார். அவர் வாழ்க்கையின் சந்தோசமான தருணத்திற்காக விலகி உள்ளார். அவரின் முடிவு சரியானதே. அவருக்கு எங்கள் பாரத் குழு சார்பாக வாழ்த்துக்கள். அவரின் எதிர்கால வாழ்க்கையில் காதலும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்று கூறியுள்ளார்.