நெருங்கி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி! படம் எப்படி வந்துள்ளது?
புஷ்பா 2 தி ரூல் டிசம்பர் 6யில் வெளியாகும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது.புஷ்பா 2 தி ரூல் இப்படம் குறித்த முழுத் தகவல் இங்கே...
Pushpa 2 :டிசம்பர் 6 ஆம் தேதி மைத்திரி திரைப்பட தயாரிக்கும் நிறுவனம் புஷ்பா 2 தி ரூலை ஆறு மொழிகளில் உலகளவில் வெளியிடவுள்ளது. இப்படம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா, ஃபாஹத் ஃப்ஹாசில் நடிப்பில் வெளியிடப்படுகிறது.ஸ்ரேயா கோஷல் பாடிய ‘அங்காரோன்’ பாடல் வலைத்தளத்தில் வெளியிட்ட சில நிமிடங்களிலே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.இப்படத்தின் டீஸர் சமூகவலைத்தளத்தில் அதிவேகமாக ரசிகர்களிடம் சென்றடைந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள், பல நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
புஷ்பா 2- டீஸர் பார்வை:
அல்லு அர்ஜுனின் 42வது பிறந்தநாளையொட்டி "புஷ்பா 2: தி ரூல்" 68-வினாடிகள் கொண்ட டீஸரரை மைத்திரி திரைப்பட தயாரிக்கும் நிறுவனம் வெளியிட்டது. இது அல்லு அர்ஜூன் தன் ரசிகர்களுக்குக் கொடுக்கும் ட்ரீடாக மாறிவிட்டது.இதனால் அளவு கடந்த பாசம் வைக்கும் ரசிகர்கள் அல்லு அர்ஜுனுக்கு பல கட் அவுட்கள் வைத்தும் அதற்கு மாலை அணிந்தும் மற்றும் பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் அல்லு அர்ஜூன் பிறந்த நாளன்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் படிக்க | தளபதி 69 ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியானது தகவல்!
அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் ‘புஷ்பா ராஜ்’ இதில் அவரின் நடிப்புத் திறமை ஒரிஜினல் கிரேக்டரை மிஞ்சும் அளவிற்கு அவரது நடிப்புத் திறமையைக் கண்டு ரசிகர்கள் வியந்தும் ஆர்வத்துடனும் அவரது கதாபாத்திரத்தை ரசித்து வந்தனர். புஷ்பா 2 தி ரூல் ரீஸர் வெளியான சில நிமிடங்களிலே பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.
புஷ்பா ராஜின் கதாபாத்திரம் இந்த டீஸரில் உச்சக்கட்டத்தை அடைந்தது அப்போது முழு படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படத்தில் அல்லு அர்ஜூன் இதில் அற்புதமாக தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
உலகளவில் ஆறு மொழிகளிலும் வெளியாகும் புஷ்பா 2:
இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வரவிருக்கும் டிசம்பர் குளிர் மாதத்தில் 6ஆம் தேதி அன்று வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி:
திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படத்தினைப் பார்க்க ரசிகர்கள் பலரும் பிரீ புக்கிங்கிற்கு தயாராகி வருகின்றனர். மேலும் இப்படம் குறித்த அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாட்கள் நெருங்க நெருங்க ஆர்வத்தில் ஈடுபடுத்தி வருகிறது.
இதற்கு முன்பாக இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கப்பட்டது, அதற்கிடையில் இப்படத்தின் பனிகள் மற்றும் படப்பிடிப்புகள் நிறைவடையாததால் படத்தினை சொன்ன நாளில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சில நாட்களுக்குப் படத்தினை வெளியிட ஒத்திவைக்கப்பட்டது.
புஷ்பா-1 படத்தின் கண்ணோட்டம்:
இப்படம் ரசிகர்களைப் பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்கப் பார்ப்போம். மைத்திரி திரைப்பட தயாரிக்கும் நிறுவனம் எதிர்பார்க்காத வெற்றியை புஷ்பா 1யில் பெற்றதால் அடுத்த கட்டத்திற்குப் படத்தினை எடுக்க முடிவு செய்தனர். இப்படம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 1 தி ரைஸ் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இப்படம் உலகளவில் எதிர்பார்ப்பைவிட அதிக வெற்றியைப்பெற்ற பாடங்களில் ஒன்று. இதில் வரும் ‘சாமி சாமி’ பாடல் பலரையும் வைப் செய்ய வைத்தது. ரசிகர்கள் முதல் கிரிகெட் வீரர்கள், வெளி நாட்டவர்கள், நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட பலரும் ரீல்ஸ் செய்து பாடலுக்கு வைப் செய்தனர். இவை அனைத்தும் சமூகவலைத்தளத்தில் அந்த ஆண்டு முழுவதும் அதிகமாகப் பார்வையாளர்கள் கேட்ட பாடலின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ