ராதிகா ஆப்தே ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தில் தான் நடித்த அனுபவம் பற்றி "ராதிகா ஆப்தே" கூறியது:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருடன் சேர்ந்து நடிப்பது யாருக்குத்தான் சந்தோஷமாக இருக்காது? ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாக இதை கருதுகிறேன். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளுமே மகிழ்ச்சியாகவே இருந்தது. ரஜினிகாந்திடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு பிடித்த ஒரு அற்புதமான மனிதர். ரஜினிகாந்தை போல் யாரையும் பார்க்க முடியாது.


மலேசியாவில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. அங்கு அதிக வெயில் இருந்ததால் கஷ்டமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் பல நாட்கள் அங்கு முகாமிட்டு தங்கி இருந்தோம். படப்பிடிப்பை சிறப்பாக நடத்தினார்கள். ரஜினிகாந்தை சார் முழு ஒத்துழைப்பு தந்தார். தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து குரல் பதிவையும் முடித்து விட்டோம். கபாலி விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்று கூறினர்.